Wednesday, 8 May 2013

கடைகால்(தூண்கள்)

மண்ணின் தன்மைக்கேற்பவும், கட்ட இருக்கும் கட்டிடத்தின் தன்மையை பொருத்தும்தான் கடைகால் வகைகள் அமையும். அப்படி அமைக்காவிடில் கட்டிடங்களில் விரிசல், பிளவுகள் ஏன் கட்டிடங்கள் உருக்குலைய கூட வாய்ப்புக்கள் உள்ளன.

நகரங்களிலும், மாநகரங்களிலும் விளை நிலங்கள் கூட இருப்பிட கட்டிடங்களாக மாற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட இடங்களில் மண்ணின் தாங்கும் திறன் குறைவாகவே இருக்கிறது. அதில் வான் உயர கட்டிடங்களை எழப்பினால் அதற்கு எதிர் விளைவுதான் உண்டாகும். ஆதலால் மண்ணை சோதனை செய்து அதன் தாங்கும் திறனுக்கு ஏற்ப கட்டிடங்களின் கடைக்காலை நாம் அமைக்க வேண்டும். பரிசோதனை செய்யும் இடத்தில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு அதற்கான பரிசோதனைகள் அனைத்தும் ஜோஸ்மர் கன்சல்டிங் இஞ்ஜினியர்ஸ் ஆய்வகத்தில் செய்யப்படுகின்றன. அந்த சோதனைகளின் அடிப்படையில் மண்ணின் தன்மையைத் தெளிவுறக் கண்டறிந்து, தாங்கும் திறன் மற்றும் அமிழ்வு விசை கணக்கீடுகளின் அடிப்படையில் அஸ்திவாரம் என்பது வரையறுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment