Friday, 11 September 2015

உங்கள் வீட்டுக் கூரை பாதுகாப்பானதா?
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மச்சு வீடுகளின் உயரத்தை 12 முதல் 15 அடியாக அமைத்து சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தையும் , மழை நீர் கசிவையும் நீண்டகாலம் தாங்கும் விதமாக நம் முன்னோர்களால் சுருக்கி என்ற (வெதரிங் கோர்ஸ்) போடப்பட்டது.
இதில் சுண்ணாம்புக்கல்லை சுட்டுப் பொடித்து அதன் சுண்ணாம்பும் கடுக்காய் , கருப்பட்டி , இஞ்சி , தேக்கு மர இலை ஆகியவற்றைக் கொண்டு செக்கில் நைய ஆட்டி , அதைக் குறிப்பிட்ட நாட்கள் வரை பாடம் செய்து பிறகு அதில் சுட்ட செங்கற்களை சேர்த்து மேல்தளம் அமைத்து அதன் மேல் சுருக்கியாக (வெதரிங் கோர்ஸ்) பயன்படுத்தினர். தென்னக மக்களின் கடவுளாக போற்றப்படுகின்ற ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக்கால் முல்லைப்பெரியாறு அணையும் இதே சுருக்கி (வெதரிங் கோர்ஸ்) முறையில் கட்டப்பட்டு காலங்களைக் கடந்து கம்பீரமாக நிற்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிமெண்ட் , கம்பி ,செங்கல் ஆகியவை புதிய தொழில் நுட்ப முறைக்கு மாறிவிட்டன. மணல் கிடைக்காத நிலையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மணல் கூட சந்தைக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சுருக்கியை மிகவும் சுருக்கி சுண்ணாம்புப் பௌடரும் , செங்கல் ஜல்லியை சேர்த்து நாம் இப்போது அமைக்கும் வெதரிங் கோர்ஸ் , கேரள தட்டு ஓடுகள் , மேற்கூரையின் பாதுகாப்பையும் கட்டடத்தின் வாழ்நாளையும் உறுதி செய்வதில்லை. இதற்காகவே புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது ரூஃப் ப்ளஸ்.
இதன் சிறப்புகள் குறித்து ரூஃப் ப்ளஸ் உரிமையாளர் சந்திர சேகரன் கூறுவது :
வீடுகளின் மேற்கூரைகளுக்கு போடப்படும் வெதரிங் கோர்ஸ் அனைத்தும் மழை நீரை உறிஞ்சும் தன்மை , வெப்பத்தை உள்கடத்தும் தன்மை , கரைபடியும் தன்மை , அதிக எடை ஏற்றம் தரும் தன்மையைக் கொண்டதாக உள்ளது. உதாரணமாக ஒரு சதுர அடிக்கு சுருக்கி , தட்டு ஓடுகள் சேர்த்து 15 ல் இருந்து 17 கிலோவாக உள்ளது. அதாவது ஆயிரம் சதுர அடி கொண்ட மேற்கூரை மீது 17 டன் எடை ஏற்றப்படுகிறது.மழைக் காலத்தில் இதுவே 20 கிலோ எடையாக மாற்றம் அடைகிறது. அதாவது ஆயிரம் சதுர அடி கொண்ட மேற்கூறை மீது 20 டன் எடையாக மாறுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் கான்கிரீட்டில் தண்ணீர் கசிவை ஏற்படுத்தி கனவு இல்லத்தை காலப்போக்கில் மிகுந்த சேதாரம் அடைய வழிவகை செய்கிறது. ரூஃப் ப்ளஸ் பதிப்பதால் ஒரு சதுர அடி மேற்கூரை 5 கிலோ எடையும் இதில் 100 சதவீதம் தண்ணீர் உறிஞ்சாத தன்மை உள்ளதால் மழைக் காலங்களில் அதே 5 கிலோ எடையாகவே உள்ளது. இதனால் மேற்கூரையின் மீது 10 முதல் 15 டன் வரை எடை குறைக்கப்பட்டும் , மழைநீர் கசிவை 100 சதவீதம் தடுக்கப்பட்டும் , கட்டடத்தின் நீடித்த வாழ்நாள் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வகை டைல்சை பதிப்பது பராமரிப்பது மிகவும் எளிது. இந்தியன் கிரீன் பில்டிங் ன் வழிகாட்டுதலின் படி ஜ.எஸ்.ஓ 9001 : 2008 , 14001 : 2004 தரச்சான்றிதழ் பெற்ற தொழிற்சாலையில் மென்மையான பல வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ரூஃப் ப்ளஸ் டைல்சை பதித்து இடைவெளியில் கிரவுட்டிங் செய்து அதன் மீது எங்களின் பிரத்யேக வாட்டர் ப்ரூப் கெமிக்கல்யை பூச்சு செய்து விட்டால் உங்கள் கனவு இல்லத்தை சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் இருந்தும் மழைநீர் கசிவில் இருந்தும் 100 % பாதுகாக்கலாம் , மின்தடை மிகுதியாக உள்ள இந்த நேரத்தில் வீட்டினுள் குளிர்சாதனம் , மின்விசிறி இல்லாமலேயே குளிர்ச்சியான சூழலை உணரலாம் . ஆண்டுக்கு 20 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். உலக வெப்பமயமாதலையும் , சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். மரக்கன்று வைத்து 15 ஆண்டு கழித்து தரும் பலனை ரூஃப் ப்ளஸ் பதித்த உடனேயே கொடுக்கவல்லது. தனி வீடுகள் கட்டுவோர் , கட்டுமான நிறுவனங்கள் , பொறியாளர்கள் , பள்ளிகள் , கல்லுரிகள் , மருத்துவமனைகள் தங்கள் தேவைக்கு அணுகலாம். விற்பனைக்குப் பின் சிறப்பான சேவையும் அளிக்கப்படுகிறது.